75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, சில கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
அதன்படி, பெப்ரவரி 4ம் திகதிக்குள் ஓராண்டு சிறைவாசம் முடிந்து விட்டால், 21 நாள் பொதுமன்னிப்பு வழங்கப்படும்.
மேலும் அபராதம் செலுத்தாததால் சிறைக்கைதிகள் அனுபவிக்கும் எஞ்சிய தண்டனை ரத்து செய்யப்படும்.
அதுமட்டுமல்லாமல், 40 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுஇ இருபது ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த கைதிகளின் எஞ்சிய தண்டனையும் நாளை ரத்து செய்யப்படுகிறது.
பொதுமன்னிப்புக்கு தகுதியான அனைத்து கைதிகளும் நாளை விடுதலை செய்யப்படுவார்கள் என சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகம் மற்றும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.