Tuesday, June 16, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

பொல்கஹவெல – ஹவனகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மது அருந்திக் கொண்டிருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வெலிக்கடஹேன, பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் 40 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles