Sunday, June 28, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமக்கள் மத்தியில் ராஜபக்ஷர்களுக்கு தனி இடம் உண்டு - சாகர காரியவசம்

மக்கள் மத்தியில் ராஜபக்ஷர்களுக்கு தனி இடம் உண்டு – சாகர காரியவசம்

மக்கள் மத்தியில் ராஜபக்ஷக்களுக்கு தனி இடம் உண்டு எனவும், தேர்தலில் நிச்சயம் வெற்றிப்பெறுவோம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதாக எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன.

தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளன. இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட கட்சி என்ற ரீதியில் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை கட்சி என்ற ரீதியில் தங்களுக்கு இல்லை எனவும், வெற்றி, தோல்வி என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles