Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்விளையாட்டுதனுஷ்கவை இடைநிறுத்த சட்டமா அதிபர் பரிந்துரை

தனுஷ்கவை இடைநிறுத்த சட்டமா அதிபர் பரிந்துரை

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை உடனடியாக உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவரை இடைநிறுத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சட்டமா அதிபர் பரிந்துரை செய்துள்ளார்.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயண அறிக்கையை தடயவியல் தணிக்கைக்காக கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் சட்டமா அதிபர் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான ஐவரடங்கிய குழுவின் அறிக்கை அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 6 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின்கீழ் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும், கடுமையான நிபந்தனையின் சிட்னி நீதிமன்றத்தால் தனுஷ்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles