கடனுதவியின் அடிப்படையில் பெறப்பட்ட கடதாசிகளின் முதல் கையிருப்பு அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்துள்ளதாகவும் தற்போது பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான புதிய தவணைக்காக பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு அறிவித்துள்ளது.
பாடப்புத்தகங்களில் 45 வீதத்தை அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கும் 55 வீதத்தை தனியார் அச்சக நிறுவனங்களுக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி 22 தகுதி வாய்ந்த தனியார் அச்சக நிறுவனங்களுக்கான நிதி கையளிக்கப்பட்டுள்ளதாகவும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட பாடப்புத்தகங்கள் பல தனியார் அச்சகங்களில் இருந்து கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.