Sunday, February 15, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவேட்பாளர்களின் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க முடியாது - CPC

வேட்பாளர்களின் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க முடியாது – CPC

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ள போதிலும், அதற்கான அனுமதியை வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு கோட்டாவை அதிகரிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது எமக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினை எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் தேவைப்படுவதேயாகும். டொலர்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கையின் பணம் தேவைப்படுகின்றது. எரிபொருள் கொள்வனவுக்கு எமக்கு தேவையான ரூபா எங்களிடம் இல்லை.

இலங்கையின் எண்ணெய் தேவை சுமார் 40% குறைந்துள்ளது. அந்த கோரிக்கைக்கு ஏற்ற பணத்தை நாங்கள் வழங்குகிறோம். இதை மீண்டும் அதிகப்படுத்தினால் ரூபா தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles