சந்தைகளில் தேங்காயின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இந்நாட்களில் தேங்காய் அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி மாத இறுதி வரை இந்த நிலை நீடிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் 3,300 மில்லியன் தேங்காய் அறுவடையை எதிர்பார்ப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.