Monday, June 15, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு14 நாட்களுக்கு மின்வெட்டு இல்லை

14 நாட்களுக்கு மின்வெட்டு இல்லை

க.பொ.த உயர்தரப் பரீட்சை இடம்பெறும் 14 நாட்களுக்கு மின்தடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் (17.01.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் 14 நாட்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நாடு பூராகவும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக, பந்துல குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பரீட்சை எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles