Monday, December 22, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற 48 இலங்கையர்கள் கைது

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற 48 இலங்கையர்கள் கைது

பிரான்ஸுக்கு சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 48 இலங்கையர்கள் பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகளால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இலங்கையர்கள் குழு கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்கு சட்டவிரோதமாக இடம்பெயர முற்பட்ட போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் 2022 டிசம்பர் 02 ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து பலநாள் மீன்பிடி இழுவை படகு மூலம் பிரான்ஸ் நோக்கி புறப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கப்பலின் பணியாளர்கள் உட்பட 43 ஆண்கள்ஈ 02 பெண்கள் மற்றும் 01 சிறுவர்கள் உள்ளனர்.

2022 டிசம்பர் 24 ஆம் திகதி பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முற்பட்ட வேளையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என 13 முதல் 53 வயது வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த நபர்களின் குழு, சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

#News radio

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles