Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவைத்தியசாலைகளில் உயிரிழக்கும் நோயாளர்களுக்கு அரசாங்கமே பொறுப்பு - தனியார் வைத்தியசாலைகள்

வைத்தியசாலைகளில் உயிரிழக்கும் நோயாளர்களுக்கு அரசாங்கமே பொறுப்பு – தனியார் வைத்தியசாலைகள்

மருந்து தட்டுப்பாடு, மின்சார துண்டிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத்தியசாலைகளில் நோயாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என தனியார் வைத்தியசாலை மற்றும் முதியோர் இல்லங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தனியார் வைத்தியசாலைகளுக்கு உடனடியாக மின்சாரம் மற்றும் அவசியமான எரிபொருள் என்பவற்றை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பல தடவைகள் கோரப்பட்ட போதிலும் அது இதுவரையில் இடம்பெறவில்லை.

சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் கடுமையான சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்திக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளிட்ட பல மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

அவசர சிகிச்சைகளுக்காக வருகின்ற நோயாளிகளுக்கு பொறுத்தமான சிகிச்சைகள் வழங்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.

எனினும் அவர்களை உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த சம்மேளனம் தெரிவித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles