Thursday, June 25, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வரும் அமெரிக்க ராஜதந்திரி

இலங்கை வரும் அமெரிக்க ராஜதந்திரி

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நோலண்ட், இன்று (22) மாலை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த 19ஆம் திகதி தெற்காசியாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை ஆரம்பித்திருந்த அவர், பங்களாதேஷ் சென்று பின்னர் இந்தியா சென்றிருந்தார்.

இன்று (22) பிற்பகல் இலங்கைக்கு வரும் அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர், கொழும்பு துறைமுக நகரத்துக்கும் விஜயம் மேற்கொண்டு வர்த்தக சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles