Saturday, March 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹம்பாந்தோட்டையிலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

ஹம்பாந்தோட்டையிலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஏற்றுமதி அடிப்படையிலான எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெற்றோலிய உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு ஆர்வத்தை வெளிப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த ஏற்றுமதி வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அதற்கமைய, ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவதற்கு பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காக விருப்பக் கோரல் அறிவித்தலை வெளியிடுவதற்கும், அவற்றில் அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்கின்ற முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பை வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles