Sunday, November 17, 2024
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய அதிவேக பேருந்து கட்டணங்கள் அறிவிப்பு

புதிய அதிவேக பேருந்து கட்டணங்கள் அறிவிப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளிடம் அறவிடப்படும் பேருந்து கட்டணத்தை நேற்று (04) நள்ளிரவு முதல் 10 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, மாகும்புர – காலி இடையிலான புதிய பேருந்து கட்டணம் 930 ரூபாவாகவும், மாகும்புர – மாத்தறைக்கு இடையிலான புதிய பேருந்து கட்டணம் 1170 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடுவலை – மாத்தறைக்கு இடையிலான புதிய சொகுசு பேருந்து கட்டணம் 1260 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு – கதிர்காமம் இடையிலான புதிய பேருந்து கட்டணம் 2270 ரூபா என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு – மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையில் புதிய பேருநது கட்டணம் 1300 ரூபாவாகும்.

அதுமாத்திரமன்றி கொழும்பு – கதிர்காமம் காலி வீதியில் சேவையாற்றும் அரை சொகுசு பேருந்து சேவை நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்பட்டு, சாதாரண பேருந்து சேவையாக மாற்றப்பட்டது.

அதன்படி, அந்த வழித்தடத்தில் செல்லும் அரை சொகுசு பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles