2023 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி மற்றும் நாட்குறிப்பு அச்சிடுதல் 80% – 90% வரை நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அச்சுப்பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்காட்டிகள், நாட்குறிப்புகள் மற்றும் புத்தகங்களை அச்சிடுவது என்பது இன்று கனவாக மாறியுள்ளதாக அகில இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கத்தின் புரவலர் ஆரியதாச வீரமன் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு அமைவாக இன்று காகிதத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாகவும், இந்த நிலைமையை மிக விரைவாக தீர்க்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
