Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயிலில் கொழும்புக்கு மரக்கறிகள்

ரயிலில் கொழும்புக்கு மரக்கறிகள்

ரயில் மூலம் கொழும்பு – கோட்டைக்கான மரக்கறி போக்குவரத்து நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் நாடாளுமன்றில் முன்வைத்த பாதீட்டு யோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரயில்வே திணைக்களத்தின் வர்த்தக மற்றும் விற்பனை பிரிவினால், மரக்கறி போக்குவரத்துக்காக 5 புதிய பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த வேலைத்திட்டம் நானுஓயா ரயில்வே நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

மரக்கறி தாங்கிய விசேட ரயில் நேற்றிரவு 12 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

அதில் கொண்டுவரப்பட்ட மரக்கறிகள் மெனிங் சந்தைக்கும்இ சிறப்பங்காடிகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles