Sunday, November 17, 2024
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயிகளுக்கு தேவையான சகல வசதிகளும் வழங்கப்படுமாம்

விவசாயிகளுக்கு தேவையான சகல வசதிகளும் வழங்கப்படுமாம்

விவசாயிகளுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அதேபோல நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடுவதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும் என அவர் கூறினார்.

நுவரெலியா நகர மண்டபத்தில் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவசாய திணைக்களத்தின் கீழ் உள்ள பயிரிடக்கூடிய இடங்களை, உற்பத்திக்கு வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. உரப்பிரச்சினையும் தீர்க்கப்பட்டுவருகின்றது.

களைக்கொல்லி உள்ளிட்டவையும் வழங்கப்படும். அதாவது விவசாயிகளுக்கு தேவையான சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படும்.

அரிசியில் போன்று மரக்கறி உள்ளிட்டவற்றிலும் நாம் தன்னிறைவு அடைய வேண்டும்.

உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் அரசியல் சார்பற்றது. அதனை அனைவரும் பொறுப்பேற்கலாம்.

அதேவேளை, கால்நடை வளர்ப்பு மற்றும் தேசிய பால் உற்பத்தி சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டு, அவற்றின் அபிவிருத்திக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles