Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உலகம்புட்டினை விமர்சித்த மொடல் அழகி பயணப்பொதியில் சடலமாக மீட்பு

புட்டினை விமர்சித்த மொடல் அழகி பயணப்பொதியில் சடலமாக மீட்பு

புட்டினை விமர்சித்த ரஷ்ய மொடல் அழகி ஒருவர் பயணப்பொதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிரெட்டா வெட்லர் என்றழைக்கப்படும் 23 வயதான குறித்த பெண், கடந்த ஆண்டு புட்டினை விமர்சித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதற்கு பலர் பாராட்டு தெரிவித்து வந்த நிலையில், அந்த பதிவை இட்டு ஒரு மாதத்திற்கு பின்னர் அவர் திடீரென மாயமானார்.

இதனால் புட்டின் அரசு அவரை கைது செய்திருக்கும் என தகவல்கள் வெளியாகின.

எனினும் அண்மையில், அவர் சாலையில் கிடந்த ஒரு பயணப்பொதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் கிரெட்டாவின் ஆண் நண்பரான டிமிட்ரி கொரோ அவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், அவரை கொலை செய்ததாகவும், மேலும் சடலத்துடன் 3 நாட்கள் சுற்றியழைந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles