Friday, November 15, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசமூக ஊடகங்களில் அனுப்பப்படும் லிங்க்களை க்ளிக் செய்யாதீர்!

சமூக ஊடகங்களில் அனுப்பப்படும் லிங்க்களை க்ளிக் செய்யாதீர்!

பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்கள் மற்றும் பல்வேறு இணைய முகவரிகளை பயன்படுத்தி ‘இலவச பரிசுகளை வழங்குவதாக கூறி’ சமூக ஊடகங்கள் ஊடாக செய்திகளை பரிமாறிக்கொள்வது அதிகரித்து வருவதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போலிச் செய்திகள் மூலம் இணையத் தாக்குதல் செய்பவர்கள் எந்த நேரத்திலும் உங்களது முக்கியமான தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கிறது.

இணையத் தாக்குதல் செய்பவர்கள் இதன் மூலம் உங்களின் சமூக ஊடக கணக்குகளை அபகரிக்க முடியும் என சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, இவ்வாறான செய்திகள் மற்றும் இணைப்புகளை க்ளிக் செய்வதை தவிர்க்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles