Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹங்வெல்ல பகுதியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொலை

ஹங்வெல்ல பகுதியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொலை

ஹங்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியை சேர்ந்த 46 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த உணவக உரிமையாளர் பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், தப்பியோடிய சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles