இந்த ஆண்டு இதுவரை HIVயினால் பாதிக்கப்பட்ட 568 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
நவம்பர் மாதத்தில் மாத்திரம் 90 பேர் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்
HIV சுய பரிசோதனை கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவது அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் அதிகளவிலான தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், கொழும்பு, அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இந்நோய் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், அதிக தொற்றாளர்கள் பதிவாகும் பகுதிகளில் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பாதுகாப்பற்ற பாலுறவு நடத்தையில் அதிக ஆபத்துள்ள மக்கள் உள்ள பகுதிகளில் ஆணுறைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.