Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஓய்வூதியத்தை எதிர்பாராத 12,000 அரச ஊழியர்கள்

ஓய்வூதியத்தை எதிர்பாராத 12,000 அரச ஊழியர்கள்

இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்களில் சுமார் பன்னிரண்டாயிரம் பேருக்கு ஓய்வூதிய விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் ஓய்வூதியத் துறைக்கு அனுப்பப்படவில்லை.

இவர்களில் சிலர் தொடர்ந்தும் பணிபுரிய எதிர்பார்த்துள்ளதாகவும், அதனால் தான் ஓய்வூதிய விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவில்லை எனவும் பொது நிர்வாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஓய்வுபெறும் எந்தவொரு ஊழியரின் சேவைக் காலம் நீடிக்கப்படாது என்றும் ஓய்வூதிய விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை தாமதப்படுத்துவதால் ஓய்வூதிய உரிமைகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படும் என்றும் அதிகாரி கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles