சந்தையில் தரம் குறைந்த கோதுமை மா விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
கோதுமை மாவின் மொத்தவிலை குறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ள போதும், சில்லறை விற்பனை நிலையங்களில் இன்னும் விலை குறையாத நிலைமையை காணக்கூடியதாக இருக்கிறது.
அதேநேரம் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டாலும், வெதுப்பக உற்பத்திகளான பாண் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் குறைக்கப்படாதுள்ளன.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத்தினர், சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கின்ற கோதுமை மா தரம் குறைந்தது என்று கூறியுள்ளனர்.
