அரச சொத்துக்களை விற்றேனும் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய டொலர் நெருக்கடியை அரச சொத்த்துக்களை விற்று தீர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் சர்வதேச சமூகத்துடன் வியாபாரம் செய்வதற்கு வாய்ப்பில்லை எனவும் அரசாங்கத்தின் அன்றாட செலவுகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 03 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிகமான நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.