மொரட்டுவ, லுனாவ பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் 4ஆவது மாடியில் இருந்து கீழே தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொரட்டுவெல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.