இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் சுயாதீன விசாரணை ஆணைக்குழுவை நிறுவுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் கூடிய நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு வரப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டம், தடயவியல் தணிக்கைகள், கணக்கியல் மற்றும் பொது நிர்வாகம் ஆகிய துறைகளில் 20 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களை உரிய ஆணைக்குழுவில் நியமிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.