Thursday, December 11, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுV8 ஜீப் ஒன்றை வழங்குமாறு கோரும் சுகாதார இராஜாங்க அமைச்சர்

V8 ஜீப் ஒன்றை வழங்குமாறு கோரும் சுகாதார இராஜாங்க அமைச்சர்

தமக்கு V8 ஜீப் ஒன்றை வழங்குமாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது இராஜாங்க அமைச்சரிடம் பென்ஸ் ரக கார் மற்றும் பி. எம். டபிள்யூ வகை கார் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் போக்குவரத்துப் பிரிவின் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு வாகனங்களை தவிர, மேற்படி V8 ரக ஜீப் கோரப்பட்டுள்ளது.

தற்போது இந்த வாகனத்தை சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் (பொது சுகாதார சேவைகள்) லக்ஷ்மி சோமதுங்க பயன்படுத்துகின்றார்.

ஜீப்பை வழங்க மேலதிக செயலாளர் மறுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அரசாங்கம் பதவி விலகியதன் பின்னர். சுகாதார அமைச்சுக்கு அமைச்சரவை அமைச்சர் நியமிக்கப்பட்ட போதிலும், அப்போது இராஜாங்க அமைச்சர் நியமிக்கப்படவில்லை.

இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய கார்களை இரண்டு மேலதிக செயலாளர்கள் பயன்படுத்தியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக, குறித்த இராஜாங்க அமைச்சர் குடை கேட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles