Monday, June 22, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிமான நிலைய VIP சேவைக்கு பசில் பணம் செலுத்தவில்லை

விமான நிலைய VIP சேவைக்கு பசில் பணம் செலுத்தவில்லை

இலங்கை வந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விமான நிலையத்தில் VIP சேவைகளைப் பயன்படுத்தியதற்கான கட்டணத்தையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான கட்டணத்தையும் இன்னும் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பசில் அமைச்சராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராகவோ இல்லாத நிலையில், விமான நிலையத்தில் பிரமுகர் ஓய்வறையைப் பயன்படுத்துவதற்கு அவருக்கு உரிமை இல்லை.

பசில் ராஜபக்சவின் பிரமாண்ட வருகைக்காக விமான நிலையத்தில் விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான கட்டணமும் செலுத்தப்படவில்லை.

மேலும், பசில் விமான நிலையத்தில் Gold Route சேவையை பெற்றிருந்தார். இதற்காக ஒரு நபருக்கு 200 அமெரிக்க டொலர் அறவிடப்படும். எனினும் இதையும் அவர் செலுத்தவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles