Tuesday, July 15, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லையாம்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லையாம்

அரச ஊழியர்களின் சம்பளம், நிவாரணம் போன்ற அத்தியாவசிய விடயங்களுக்கு அரசாங்கத்திடம் பணமில்லை என கூறப்படுகிறது.

தற்போது கிடைக்கும் வருமானம் இதற்கு போதாது என நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன குறிப்பிடுகின்றார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களின் பெறுமதி சுமார் 200 பில்லியன் ரூபா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திறைசேரியில் இருந்து தினசரி பணப்புழக்கத்தை கையாள்வது சிரமமாக உள்ளது எனவும், சம்பளம் மற்றுமு; மானியம் போன்ற அத்தியாவசிய விடயங்களுக்கு கூட இந்த வருமானம் போதாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் அரசாங்கத்தின் செலுத்தப்படாதுள்ள கட்டணங்களின் பெறுமதி சுமார் 200 பில்லியன் ரூபாவாகும்.

குறிப்பாக கட்டுமானம் மற்றும் பிற நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையும் அவற்றில் அடங்கும்.

அரசாங்கத்தால் அந்த கட்டணங்களை செலுத்த முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles