Tuesday, June 23, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு13 இலட்சம் ரூபா பெறுமதியான டீசலை திருடிய இருவர் கைது

13 இலட்சம் ரூபா பெறுமதியான டீசலை திருடிய இருவர் கைது

கருங்கல் வர்த்தக தளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13 இலட்சம் ரூபா பெறுமதியான 3000 லீற்றர் டீசலை திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் 30 லீற்றர் நிறைகொண்ட 3 டீசல் கேன்களுடன் , மோட்டார் சைக்கிள் மற்றும் டீசல் விற்பனை மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 15,000 ரூபாவுடன் கைது செய்யப்பட்டதாக திவுலபெலெஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 மற்றும் 24 வயதுடைய ஹெபராவ பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்கள் இன்று (16) மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலபெலெஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles