Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய அரசியலமைப்பு வரைவு தயாரிக்க 3 கோடி ரூபா செலவு

புதிய அரசியலமைப்பு வரைவு தயாரிக்க 3 கோடி ரூபா செலவு

புதிய அரசியலமைப்பு வரைவை தயாரிப்பதற்காக 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மூன்று கோடி ரூபாவுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்துகிறது.

6 மாதங்களில் முடிக்க வேண்டிய பணிகள் 15 மாதங்களில் முடிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பை உருவாக்க 2020 அக்டோபரில் முதல் குழு கூடி, 38 குழு அமர்வுகள் மற்றும் வெளி கட்சிகளுடன் ஒன்பது பேச்சுவார்த்தைகளுக்கு இரண்டு கோடி ரூபாவுக்கு மேல் செலவிடப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.

இந்த செலவினங்களில், அலுவலக உபகரணங்களுக்காக 12.5 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது , எவ்வித தேவைக்கும் பயன்படுத்தப்படாத 3 அலுவலக அறைகளுக்கான வாடகையும் வழங்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles