செய்திகள்உள்நாட்டுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி மரணம்

காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி மரணம்

சந்தேகிக்கப்படும் வகையில் இரு இளைஞர்களால் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியொருவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியை மருத்துவமனையில் ஒப்படைத்த இளைஞர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியை குறித்த இரு இளைஞர்களும் காரில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து உடனடியாக சிகிச்சை வழங்குமாறு கோரியுள்ளனர்.

எனினும், நோயாளியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

தாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 15 வயது சிறுமியின் முகத்திலும் உடலிலும் காயங்கள் இருந்ததை அவதானித்ததாகவும் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து, இரு இளைஞர்களும் அவ்விடத்தை விட்டு மாயமாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை வளாகத்தில் உள்ள பாதுகாப்பு கமரா அமைப்பை பரிசோதித்து உரிய கார் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சிறுமியின் மரணத்துக்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles