சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் கப்பல் 53 நாட்களாக கொழும்பு வெளி துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கப்பலுக்கான தாமதக் கட்டணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே 79 இலட்சத்துக்கும் அதிகமான டொலர்களை மேலதிகப் பணமாக செலுத்த வேண்டியுள்ளதாகவும் எண்ணெய் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சுத்திகரிப்பு நிலையம் ஒரு மாதத்திற்கு முன் மூடப்பட்ட நிலையிலேயே இந்த மசகு எண்ணெய் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது.
இந்தக் கப்பலில் எக்போ என்ற ரஷ்ய நிறுவனத்துக்குச் சொந்தமான 99,000 மெட்ரிக் டன் மசகுஎண்ணெய் உள்ளதுடன், அது செப்டம்பர் 20 அன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
