Sunday, May 11, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலை குறைக்கப்படும்

பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலை குறைக்கப்படும்

தேவையான அளவு கோதுமை மா கிடைத்தால், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், பேக்கரிகளுக்கு ஒரு கிலோ கோதுமை மாவை கொள்வனவு செய்வதற்கு சுமார் முன்னூறு ரூபா செலவாகிறது.

இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவின் கையிருப்பு போதுமான அளவு கிடைத்தால், அடுத்த வாரம் முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும்.

எவ்வாறாயினும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை இப்போது அறிவிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles