இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள மசகெண்ணெய், கப்பலிலிருந்து இதுவரை தரையிறக்கப்படாமல் உள்ளதாக எரிபொருள் துறைமுக மின்சாரம் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலுக்குத் தாமத கட்டணமாக இன்றுடன் 4.3 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
இந்த கப்பல் கடந்த மாதம் 20 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பை வந்தடைந்ததாகவும் அந்த சங்கத்தின் அதன் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாள் தாமத கட்டணமாக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் டொலர்களை செலுத்த வேண்டும் என்றும், குறித்த கப்பலில் 99,000 மெட்ரிக் டன் மசகெண்ணெய் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் .
மேலும் குறித்த கப்பலுக்கு இன்னும் பணம் செலுத்தப்படவில்லை என்றும், எப்போது தரையிறக்கப்படும் என்ற திகதியும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்