செய்திகள்உள்நாட்டுநீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி

நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி

நவகமுவ – அக்பார்வத்தை – கொரதோட்டை பகுதியில் நீராட சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொடர்சியாக பெய்து வரும் அடை மழைக்காரணமாக பாரிய கற்குழியொன்றில் நிரம்பியிருந்த மழை நீரில் நீராடிய போதே சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சிறுவர்களின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles