Wednesday, March 11, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடன் மறுசீரமைப்புக்காக செஹான் சேமசிங்க எடுக்கும் முயற்சி

கடன் மறுசீரமைப்புக்காக செஹான் சேமசிங்க எடுக்கும் முயற்சி

நாட்டின் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கான சர்வதேச உதவிகளை மேலும் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த மாநாட்டில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுக்க தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வொஷிங்கடனில் இடம்பெறும் குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இராஜாங்க நிதியமைச்சர் செஹான் சேமசிங்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் அமெரிக்காவில் ஊடங்களிடம் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள தற்போதைய காலக்கட்டத்தில் இது போன்றதொரு மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles