இலங்கையை நடுத்தர வருமானம் பெறும் நாடாக உள்ள நிலையில், குறைந்த வருமானம் பெறும் நாடாக மாற்றுவதற்கான பிரேரணையை அமைச்சரவை இன்று பரிசீலிக்கவுள்ளது.
இது சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடமிருந்து (IDA) சலுகை நிதியைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது – இது உலகின் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு உதவும் உலக வங்கியின் ஒரு அங்கமாகும்.
அந்நிய கையிருப்பு பற்றாக்குறை, பணவீக்கம், கடனை அடைப்பதில் உள்ள சிரமம் உள்ளிட்ட நிதி நெருக்கடிகளை கருத்திற்க் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையை நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதற்கு சில முன்னாள் அதிகாரிகள் புள்ளிவிபரங்களை கையாண்டனர் என்ற கூற்றையும் அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளது.
