Saturday, July 19, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவசந்த முதலிகே செய்த தவறு என்ன? பிரதமரிடம் வினவினார் சஜித்

வசந்த முதலிகே செய்த தவறு என்ன? பிரதமரிடம் வினவினார் சஜித்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (05) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள சஜித் பிரேமதாச, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பின் பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹசந்த குணதிலக்க மற்றும் கல்கம சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 48 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.

வசந்த முதலிகே மல்வான, கலவான, நவகமுவ பிரதேசங்களுக்கு இரவு வேளைகளில் அழைத்துச் செல்லப்படுவதாகவும், இந்த நடவடிக்கையில் தமக்கு சந்தேகம் இருப்பதாகவும் சஜித் பிரேமதாச கூறினார்.

தப்பித்து ஓட முற்பட்டதால் வசந்த முதலிகே சுட்டுக் கொல்லப்பட்டதாக எதிர்காலத்தில் செய்திகள் வெளியாகககூடும் என அவர் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles