Sunday, November 2, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயூரியா உரம் முதலாம் திகதி முதல் விநியோகிக்கப்படும்

யூரியா உரம் முதலாம் திகதி முதல் விநியோகிக்கப்படும்

பெரும் போகத்துக்கு தேவையான யூரியா உரம், எதிர்வரும் முதலாம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் சிறுபோகத்துக்கு கிடைத்த யூரியா உரத்தில் எஞ்சிய கையிருப்பை பெரும்போக செய்கைக்காக விநியோகிக்கவுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அபேரத்ன தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக ஒரு ஹெக்டேயர் நெற்செய்கைக்காக 20 கிலோ கிராம் யூரியா உரம் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, குருணாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்கே யூரியா உரத்தை முதலில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles