Thursday, February 12, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயூரியா உரம் பெற ஒன்லைனில் பதிவு செய்ய வேண்டும்

யூரியா உரம் பெற ஒன்லைனில் பதிவு செய்ய வேண்டும்

மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்குவதற்கான ஒன்லைன் பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, www.agrarian.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விவசாயிகள் பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்போகத்தில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு யூரியா உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

நெல் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்பட்ட அதே விலைக்கு (50 Kg – 10,000/-) சோள விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles