செய்திகள்உள்நாட்டுகொழும்பில் தோற்கடிக்கப்பட்ட ரணில் திறமையானவர் அல்ல - சஜித் பிரேமதாச

கொழும்பில் தோற்கடிக்கப்பட்ட ரணில் திறமையானவர் அல்ல – சஜித் பிரேமதாச

கொழும்பு மாவட்டத்தில் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்குச் சென்ற ரணில் விக்ரமசிங்க திறமையானவர் அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதால் மக்கள் இவ்வாறு கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ராஜபக்ஷ திருடர் கூட்டத்தை பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தால் இன்று தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles