Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண IMF இடம் கடன் பெறுமாறு கூறுவோர் முட்டாள்கள் - வாசுதேவ...

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண IMF இடம் கடன் பெறுமாறு கூறுவோர் முட்டாள்கள் – வாசுதேவ MP

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற வேண்டும் என எவரேனும் கூறினால் அவர்கள் முட்டாள்கள் என வாசுதேவ நாணயக்கார MP தெரிவித்துள்ளார்.

1978ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நாட்டின் பொருளாதாரத்தை திரும்பிப் பார்க்கும் போது சர்வதேச நாணய நிதியத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சேதம் தெளிவாக காண முடிகின்றது.

தாய்லாந்து, தாய்வான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் IMF இன் அடிப்படை நோக்கத்தை புரிந்து கொண்டதால் அது வழங்கிய அறிவுறுத்தல்களை நிராகரித்ததாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு இணங்கும் அரசியல்வாதிகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை சமநிலைப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles