தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பதிவு செய்வதற்கான வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.
மோட்டார் போக்குவரத்து துறையின் இணைய கட்டமைப்பு திருத்தப்பணி முடிவடைந்துள்ளதால் புதிய பதிவை இனி மேற்கொள்ளலாம்.
இதன்படி புதிய வாடிக்கையாளர்கள் தங்களது QR குறியீட்டை பெற்றுக்கொள்ளமுடியும்.
