காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பமான நாள் முதல், போராளிக்கு நட்சத்திர விடுதியொன்று உணவு வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த ஹோட்டலில் இருந்து சுமார் 500-600 உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
போராட்டக்காரர் ஒருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இது தெரியவந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்படிஇ உரிய உணவுப் பொதிகள் இலவசமாக வழங்கப்பட்டதா அல்லது ஏதாவது அமைப்பினால் வழங்கப்பட்டதாக என்பது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.