ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தனுஷ்க ராமநாயக்க, இன்று (29) காலை காலிமுகத்திடல் போராட்டக்களத்துக்கு சென்றுள்ளார்.
போராட்ட களத்தில் இருந்த மக்களுடன் அவர் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் வழியில் காலி முகத்திடலில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்துக்களை பெற்றுக்கொண்டு அங்கிருந்து அவர் வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.


