Thursday, April 16, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடிசம்பரில் எரிவாயு நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி

டிசம்பரில் எரிவாயு நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி

டிசம்பர் 31ஆம் திகதிக்குள் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவர முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் தேவையான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளதாகவும், அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

அன்றாட சமையல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான எரிவாயுவை வழங்குவதற்கும், சிறு மற்றும் நடுத்தர தொழில்களை நடத்துவதற்கும், கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் சிரமங்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் தொடர்ந்து கூடி ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles