Wednesday, January 15, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெஹெலியவின் மகனுக்கு சொந்தமான 2 சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை

கெஹெலியவின் மகனுக்கு சொந்தமான 2 சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ரமித் ரம்புக்வெல்ல கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள சொகுசு வீடமைப்புத் தொகுதியில் இரண்டு வீடுகளை தலா 80 மில்லியன் ரூபா வீதம் 65 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்திருந்தது.

இந்தக் கோரிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதி, சம்பந்தப்பட்ட சொத்துக்களுக்கு டிசம்பர் 19ஆம் திகதி வரை தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles