நாவுல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ரஜவெல கிராமத்தில் காட்டு யானை தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொங்கஹவெல – ராஜவெல பிரதேசத்தை சேர்ந்த யு.ஜி.சமிந்த பண்டார என்ற 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பக்கத்து ஊரில் நடந்த இறுதிச் சடங்கொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 பேரை காட்டு யானை துரத்தியுள்ளது.
இதன்போது இருவர் தப்பித்து சென்றதாகவும் ஒருவர் மட்டும் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.