Wednesday, January 15, 2025
25.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 566 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரை 542 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் ஒரு புகாரும் இதுவரை கிடைத்துள்ளது.

இதேவேளை, இவ்வருடம் 225,000 அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 13,000 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து வேட்பாளர்களுக்கும் அடையாளங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles