ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 121 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதில், மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு 41 முறைப்பாடுகளும், தேசிய தேர்தல் முறைப்பாடு மையத்துக்கு 80 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 18 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.